காற்றாலையில் திருடிய ஆசாமி கைது


காற்றாலையில் திருடிய ஆசாமி கைது
x

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தனியார் காற்றாலையில் திருட்டு வழக்கில் 3 மாதமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தனியார் காற்றாலையில் திருட்டு வழக்கில் 3 மாதமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

காற்றாலையில் திருட்டு

ஆரல்வாய்மொழி குமாரபுரம் செல்லும் சாலை அருகே தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக 2 காற்றாலைகள் இயங்கி வந்தன. கடந்த 23-ந் தேதி இரவு காற்றாலைகள் இயங்குவதை பார்த்துவிட்டு வந்த ஊழியர் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது இரண்டு காற்றாலைகளில் ஒன்று ஓடாமல் நின்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது காற்றாலையின் கதவுகள் உடைக்கப்பட்டு, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தன.

இதுகுறித்து காற்றாலை மேலாளர் ராபர்ட் ஜாண் (வயது 42) ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வந்தபோது முப்பந்தல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஒருவர் கைது

அப்போது திருடிய காற்றாலை பொருட்களை பழைய இரும்பு கடையில் விற்பதற்காக சென்ற ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டை சேர்ந்த ஜெகன் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்த பாபு என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஆரல்வாய்மொழி சந்திப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் நின்ற ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயற்சித்தார். அவரை மடக்கிபிடித்து விசாரித்தபோது அவர்தான் காற்றாலை திருட்டு வழக்கில் 3 மாதமாக தலைமறைவாக இருந்த பாபு (40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story