மின்மோட்டாரை திருடியவர் கைது


மின்மோட்டாரை திருடியவர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே மின்மோட்டாரை திருடியவர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி சுமதி. இவர் வீட்டு தோட்டத்தில் உள்ள கொட்டகையில் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார் உள்ளது. இந்த மின்மோட்டாரை 2 பேர் நேற்று முன்தினம் இரவு திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த சுமதி, அதைப்பார்த்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மோட்டாரை திருட முயன்ற ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தை கலியபெருமாள் என்பதும். தப்பி ஓடியது அதே பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தமிழ்வாணன் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story