பூசாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


பூசாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூசாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 30). இவர் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.

கடந்த 11 ஆம் தேதி கோவிலில் பூசாரி குப்புசாமி இருந்த போது, அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் மகன் அஜய் (28) வீண் தகராறு செய்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலிசில் குப்புசாமி புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்கு பதிவு செய்து, வாலிபர் அஜய்யை நேற்று கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story