அரிவாளை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது
மணல்மேடு அருகே அரிவாளை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது
மயிலாடுதுறை
மணல்மேடு:
மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது47). இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சம்பவத்தன்று திருச்சிற்றம்பலத்தில் கமலக்கண்ணன் தனது கையில் அரிவாளை வைத்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கமலக்கண்ணன், போலீசாரையும் அரிவாளால் வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை, போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story