அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது


அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
x

வள்ளியூரில் ஒருவரிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் பெஞ்சமின் மகேஷ் (வயது 42). இவர் வள்ளியூர் பகுதியில் ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் சொந்தமாக இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகத்திற்கு வந்த தெற்கு வள்ளியூரை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (46) என்பவர் அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு ஆயில் மாற்றக்கோரி தகராறில் ஈடுபட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெஞ்சமின் மகேஷ் அவருடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில் ஆறுமுகம் அவரை அவதூறாக பேசி கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தி செந்தில் ஆறுமுகத்தை கைது செய்தார்.


Next Story