ஓடையில் மணல் அள்ளியவர் கைது


ஓடையில் மணல் அள்ளியவர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை அருகே ஓடையில் மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாலார்பட்டி ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், பாலார்பட்டி காலனி தெருவை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story