மீன்பிடிக்க சென்றவர் தவறி விழுந்து பலி


மீன்பிடிக்க சென்றவர் தவறி விழுந்து பலி
x

குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் தவறி விழுந்து பலியானார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரியாகும். இந்த ஏரியில் தற்போது 70 சதவீதம் தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் பேரணாம்பட்டு ரோடு ஏரிக்கரையை ஒட்டியபடி ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தது.

தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதனுடன் வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அவர் அணிந்திருந்த உடையில் இருந்த ஆதார் கார்டில் ஆம்பூர் அருகே உள்ள உமராபாத்தை அடுத்த கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த சையத்முனவர் (வயது 48) என பெயர் இருந்தது. இதனை தொடர்ந்து உமராபாத் போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.இதனையடுத்து சையத்முனவரின் உறவினர்கள் விரைந்து வந்து உடலை அடையாளம் காட்டினர். சையத்முனவர் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன்பிடித்தபோது ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story