ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றவர் 'திடீர்' சாவு


ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றவர் திடீர் சாவு
x

ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றவர் ‘திடீர்’ சாவு

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

புத்தளத்தை சேர்ந்தவர் செல்வதாஸ் (வயது50). இவர் இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனைக்காக வந்தார். ஆலயத்தில் நாற்காலியில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது திடீரென நெஞ்சை பிடித்தவாறு கீழே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அருகில் நின்றவர்கள் விரைந்து வந்து அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story