நாட்டு வெடிகுண்டை கவ்விய பன்றி வாய் சிதறி சாவு


தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செண்பகராமன்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டை கவ்விய பன்றி வாய் சிதறி இறந்தது. வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

செண்பகராமன்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டை கவ்விய பன்றி வாய் சிதறி இறந்தது. வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாய் சிதறி இறந்த பன்றி

செண்பகராமன்புதூர் அருகே சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதி வடக்கு மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு அடிக்கடி காட்டு பன்றிகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில் நேற்று காலை மரப்பாலத்தில் இ்ருந்து சமத்துவ புரத்துக்கு செல்லும் வழியில் சாலையோரம் பன்றி ஒன்று வாய் சிதறி இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த பன்றி சமத்துவபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. அவர் அந்த பன்றியை அங்கு உள்ள சுடலை முண்டன்சாமி கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்த வளர்த்து வந்தார். அந்த பன்றி நாட்டு வெடிகுண்டை கவ்விய போது வாய் சிதறி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வனவிலங்கு வேட்டை

இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இ்டத்துக்கு வந்து பன்றியை பார்த்தனர். ஆரல்வாய்மொழி போலீசில் சரவணன் புகார் செய்தார்.

அதைத்ெதாடர்ந்து மலையில் இருந்து கீழே இறங்கி வரும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக யாரும் நாட்டு வெடிகுண்டை வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த பகுதி வழியாக பொதுமக்கள் பலர் செல்வதுண்டு. அவர்கள் நாட்டு வெடிகுண்டை மிதித்திருந்தால் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.


Next Story