விஷம் குடித்த விவசாயி சிகிச்சைபலனின்றி சாவு


விஷம் குடித்த விவசாயி சிகிச்சைபலனின்றி சாவு
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்த விவசாயி சிகிச்சைபலனின்றி சாவு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பழனிக்குஞ்சு (வயது 60). விவசாயியான இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம்உடைந்த அவர் கடந்த 30-ந் தேதி விட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) சாப்பிட்டதாக கூறப்படுகிறது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பழனிக்குஞ்சு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, பழனிக்குஞ்சு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story