விஷம் குடித்த தொழிலாளி சாவு
நெல்லை அருகே விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பண்டாரம் (வயது 48). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். கடந்த 5-ந் தேதி பண்டாரம் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் பண்டாரம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story