விஷம் குடித்த தொழிலாளி சாவு


விஷம் குடித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 53). தொழிலாளியான இவர் கடந்த 13-ந் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story