விஷம் குடித்த இளம்பெண் சாவு
நெல்லையில் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி சண்முகபிரியா (வயது 31). இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்த அவர் குடும்ப பிரச்சினை காரணமாக வண்ணார்பேட்டை ஆற்றுப்பகுதி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story