போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து போலீசார் திடீர் சோதனை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
போதை பொருட்கள் ஒழிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிரைவர் ஒருவர் மது போதையில் நிர்வாணமாக சுற்றி திரிந்தார். அவர் கஞ்சா பயன்படுத்தி இருந்ததாக கூறப்பட்டது.
அதேபோல் சாமியார் ஒருவர் மது போதையில் நடைபயிற்சி மேற்கொண்ட நபர்களை கம்பால் தாக்கினார். இவற்றை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீர் சோதனை நடத்தினர்.
பரபரப்பு
அப்ேபாது கிரிவலப்பாதையில் சந்தேகப்படும் வகையில் உள்ள சாமியார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிந்த நபர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த உடைமைகளை தீவிர சோதனை செய்து கஞ்சா, சாராயம் போன்றவை உள்ளதா என்று சோதனை நடத்தினர்.
இதனால் இன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பரபரப்பு ஏற்பட்டது.