மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் டிரைவர் தேர்வு நாளை நடக்கிறது


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் டிரைவர் தேர்வு நாளை நடக்கிறது
x

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் டிரைவர் தேர்வு நாளை நடக்கிறது.

சென்னை,

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) தென் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெல்லி காவல்துறையில் ஆண் காவலருக்கான (ஓட்டுனர்) தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. கணினி வாயிலாக நடைபெறும் இந்தத் தேர்வை தென் மண்டலத்தில் 7 ஆயிரத்து 247 பேர் எழுத உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஆந்திர பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், சிராலா மற்றும் தெலுங்கானாவில் ஐதராபாத், வாராங்கல், கரீம்நகர் ஆகிய 19 நகரங்களில் உள்ள 20 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.

தேர்வானது 21-ந்தேதி (நாளை) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை என 3 கட்டங்களாகத் நடத்தப்படும். இதற்கான மின்னணு அனுமதி சான்றிதழை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் தகுதிச்சான்றை விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-28251139, 9445195946 என்ற தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story