போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

திருச்சி

முசிறி கீழ்வடுகப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயற்சித்ததாக முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முத்துக்குமார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தார். இதனை தொடர்ந்து அவர் வழக்கு தொடர்பாக நேற்று சாட்சியம் அளிக்க திருச்சி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் சாட்சியம் அளிக்க வரவில்லை. இதையடுத்து தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி, இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தற்போது அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story