கடலூர் முதுநகரில் தண்டவாளம் அருகே ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம் போலீசார் விசாரணை


கடலூர் முதுநகரில் தண்டவாளம் அருகே ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:31 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் தண்டவாளம் அருகே ரத்தக்காயங்களுடன் ஆண் பிணமாக கிடந்தது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கும், கேப்பர் குவாரி நிலையத்திற்கும் இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் சிதம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அதில் அந்த நபர், நீல நிறபேண்ட் மற்றும் ஊதா கலர் பனியன் அணிந்து இருந்தார். அவரது சட்டை அருகில் இருந்த செடியில் இருந்தது. மேலும் அவர் தலையில் மட்டும் ரத்தக்காயங்கள் இருந்தன. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்?, அவர் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story