பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை


பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை
x

புகையிலை பொருட்கள் புழக்கம் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருநெல்வேலி

புகையிலை பொருட்கள் புழக்கம் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

புகையிலை பொருட்கள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, செல்போன் பயன்படுத்தப்படுகிறதா? என்று அடிக்கடி சிறை காவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுதவிர மாநகர போலீசாரும், சிறை வளாகத்துக்கு திடீரென்று சென்று கைதிகளின் அறைகளில் சோதனை நடத்துவது வழக்கம். இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புகையிலை புழக்கம் இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சிறை வளாகத்தில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதிரடி சோதனை

மாநகர கிழக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில், உதவி கமிஷனர் பிரதீப், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை திடீரென்று சிறை வளாகத்துக்குள் சென்றனர்.

அவர்கள் கைதிகளின் அறைகள், கைதிகள் பகல் நேரத்தில் நடமாடும் வளாகம், உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடைபெற்றது. ஆனால், சிறையில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை காரணமாக சிறையில் பரபரப்பு நிலவியது.


Next Story