நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பலின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்


நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பலின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்
x

ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தில் அந்த கும்பலின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தில் அந்த கும்பலின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

நகை திருட்டு

நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவங்களில் பெண் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் டிப் டாப் உடை அணிந்து வரும் பெண்கள் பயணியோடு பயணியாக சேர்ந்து நகை திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.

புகைப்படம் வெளியீடு

இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப்படங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் புகைப்படங்களை பஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திருடர்கள் ஜாக்கிரதை என்று நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து தகவல் தெரியவந்தால் உடனே போலீசுக்கு தெரிவிக்கும்படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

மேலும், திருட்டு கும்பலை பிடிக்க வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் பெண் போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் மாற்று உடையில் சென்று தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story