ஓட்டப்பிடாரம் அருகே காரில் கட்டத்தப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.


தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே காரில் கட்டத்தப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே காரில் கட்டத்தப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் புதியம்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் 6 சாக்குப்பண்டல்கள் இருந்தன. அவற்றை பிரித்து போலீசார் சோதனை நடத்தினர். அவற்றில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

இதை தொடர்ந்து காரில் இருந்த ரூ.1.56 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்த காரை ஓட்டிவந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் மதுரை பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்த செண்பகமூர்த்தி மகன் கார்த்திகேயன் (வயது 22) என்பதும், மதுரை மாவட்ட பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தததும் தெரிய வந்தது. இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.


Next Story