சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய நபரை எச்சரித்து அனுப்பிய போலீசார்


சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய நபரை எச்சரித்து அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் உள்ள ஒரு கோவிலில் இருதரப்பினர் உள்ளனர். அந்த இருதரப்பினருக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பை சேர்ந்த நபர்கள் கோவிலில் நரபலி கொடுத்ததாக சமூக வலைதளத்தில் வதந்தியை பரப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார், சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பிய தரப்பை சேர்ந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். வதந்தி பரப்பிய நபர் அதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து அவர் சமூக வலைதளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டு பதிவு செய்தார். இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நரபலி கொடுத்ததாக வதந்தி பரப்பப்பட்ட கோவிலுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story