மாணவியை காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிட்ட போலீஸ் சூப்பிரண்டு
வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த பள்ளி மாணவியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட்டார்.
வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த பள்ளி மாணவியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட்டார்.
தனியாக தவித்த பள்ளி மாணவி
வேலூர் பாகாயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் செயல்பாடு குறித்தும், மேற்கண்ட பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறதா? என்பது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஓட்டேரி ஏரி, அருகே உள்ள சாலை சந்திப்பு பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த போலீஸ் சூப்பிரண்டு, அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த மாணவி தன்னுடைய பெயர் சினேகா என்றும் வேலப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
காரில் அழைத்து சென்றார்
மேலும் வீட்டுக்கு செல்ல காத்திருப்பதாகவும், வீட்டில் இருந்து யாரும் அழைக்க வரவில்லை என்றும் தெரிவித்தார். இதைக்கேட்ட அவர் மாணவியை தனது காரில் அமர வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் குளவிமேட்டில் உள்ள அந்த மாணவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டின் முன்பு இறக்கிவிட்டார்.
அப்போது மாணவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தனது நன்றியை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள பொது மக்களிடம் இங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா?, மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.
தனியாக தவித்த பள்ளி மாணவியை போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பாக காரில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.