போலீசாருக்கு புதிய காவலர் எண் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு புதிய காவலர் எண்ணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
திருப்பத்தூர்
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனாலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலிசார் வேலூர் மாவட்ட காவலர் எண் கொண்டே தங்களை அடையாளப்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு திருப்பத்தூர் மாவட்ட காவலர் எண் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி காவலர் எண் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் போலீஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story