கத்தாங்கன்னி குளம் நிரம்பியது
கத்தாங்கன்னி குளம் நிரம்பியது
காங்கயம்
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் இறுதியாக கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் மழை நீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் சென்று கொண்டிருப்பதால் இதில் 31-வது குளமான கத்தாங்கன்னி குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழைநீர் திறக்கப்பட்டதால் குளத்தின் மொத்த உயரமான 16 அடியை நோக்கி நீர் வேகமாக நிரம்பி வந்தது. நேற்றுமுன்தினம் காலை குளம் முழுமையாக நிரம்பியதை அடுத்து வெள்ள போக்கி பகுதி வழியாக 24 ஆண்டுகளுக்கு பின் உபரி நீர் வெளியேறியது.இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் உபரி நீர் வெளியேறும் இடத்தில் மலர் தூவி தண்ணீருக்கு மரியாதை செய்தனர். பல ஆண்டுகளுக்கு பின் கத்தாங்கன்னி குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதையடுத்து விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
==============
-