வீட்டு சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய பரிதவித்த நாய்


வீட்டு சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய பரிதவித்த நாய்
x

வீட்டு சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய பரிதவித்த நாய் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் லெட்சுமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றி திரிந்த ஒரு தெருநாய் அங்குள் பிரதாப் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பின்னர் வெளியே செல்ல வழியை தேடியபோது வீட்டின் சுற்றுச்சுவரில் துளை இருப்பதை கண்டது. உடனே அந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து தலையை நுழைத்துள்ளது. ஆனால் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அதாவது நாயின் தலை சுவருக்கு வெளியே வந்தபடியும், கழுத்து பகுதி துளையிலும் சிக்கி கொண்டது.

இதனால் முன்னோக்கி செல்ல முடியாமலும், தலையை பின்னோக்கி இழுக்க முடியாமலும் நாய் பரிதவித்தது. ஒரு கட்டத்தில் தலையை வெளியே எடுக்க பலமாக முயற்சி செய்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வடிந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் இரவு முழுவதும் சுற்றுச்சுவர் துளையிலேயே பரிதவித்தது.

நேற்று காலையில் பிரதாப் கண்விழித்து வெளியே வந்தபோது வீட்டு சுவரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நாயை மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனே இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி சுவரின் துளையை சற்று பெரிதாக உடைத்து நாயை மீட்டனர்.

சுவரில் இருந்து விடுதலையான மகிழ்ச்சியில் நாய் துள்ளி குதித்து சந்தோசத்துடன் ஓடியது.


Next Story