குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்
x

வேலம்-மருதாலம் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே உள்ள வேலத்தில் இருந்து செல்லும், வேலம்- மருதாலம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் இந்த சாலையில் செல்லும்போது மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது.

வயதான முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் இச்சாலையில் செல்லும்ேபாது, சில சமயங்களில் கீழே விழுந்து செல்லும் நிலைஉள்ளது.

எனவே குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story