பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மக்கள் நேற்று மீண்டும் வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதுபோல் கொல்லம்-சென்னை செல்லும் ரெயிலிலும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தனர்.


Next Story