மின் கம்பி அறுந்து விழுந்து கோவில்காளை பலி
மின் கம்பி அறுந்து விழுந்து கோவில் காளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
மதுரை
மேலூர்,
மேலூர் அருகே உள்ள கேசம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் மண்டைஅடைக்கண். விவசாய வேலை செய்துவரும் இவர் கோவில் காளை ஒன்று வளர்த்து வந்தார். வயல்வெளியில் அவரது காளை மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வயல்வெளியில் இருந்த மின் கம்பி கோவில் காளை மீது அறுந்து விழுந்தது. கோவில் காளை பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. இதுபோல அறுந்து விழும் அபாய நிலையில் மின்சார கம்பிகள் இப்பகுதியில் உள்ளதாகவும், அந்த மின்கம்பிகளை அகற்றி புதிய மின்கம்பிகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story