மின் கம்பி அறுந்து விழுந்து கரும்புகள் எரிந்து சேதம்


மின் கம்பி அறுந்து விழுந்து கரும்புகள் எரிந்து சேதம்
x

வாணியம்பாடி அருகே கரும்பு தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீயில் எரிந்து சேதமடைந்தன.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே கரும்பு தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் (வயது 50). இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கரும்புத் தோட்டத்தில் இருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மின்சார கம்பி கரும்பு தோட்டத்தில் அறுந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கரும்புகள் எரிந்து சேதம்

தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத காரணத்தினால் தீயணைப்புத் துறையினர் மற்றும் அந்தப் பகுதி மக்கள் இணைந்து டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீயில் கருகி சேதமடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story