கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது
ஆற்காடு அருகே கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த லாடவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பிரசவ வலி தொடர்பாக அவசர அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் டிரைவர் கார்த்திக் ஆகியோர் ஆம்புலன்ஸ்சில் லாடவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி சரிதா (வயது 29). நிறைமாத கர்ப்பிணாய இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக லாடவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் டிரைவர் கார்த்திக் ஆகியோர் விரைந்து சென்று சரிதாவை ஏற்றிக்கொண்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆற்காடு அருகே முப்பது வெட்டி பகுதியில் சென்றபோது சரிதாவிற்கு பிரசவ வலி அதிகமானது. உடனியாக ஆம்புலன்சை நிறுத்தி ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தனர். அப்போது சரிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் குழந்தையை லாடவரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் அனுமதித்தனர்.