வத்தல் விலை குறைவு


வத்தல் விலை குறைவு
x

விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் விலை குறைந்துள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் விலை குறைந்துள்ளது.

உளுந்து

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.500 விலை குறைந்து ரூ.7 ஆயிரம் ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.10,800 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.9 ஆயிரம் ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.9,800 ஆகவும், பாசிப்பயறு ரூ.7,400 முதல் ரூ.9,100 வரையிலும் விற்பனையானது.

துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.10 ஆயிரம் ஆக விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.3,800 முதல் ரூ.3,900 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.1,000 விலை குறைந்து ரூ.4,500 முதல் ரூ.5,000 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.3 ஆயிரம் விலை குறைந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.3 ஆயிரம் விலை குறைந்து ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25,000 வரையிலும் விற்பனையானது.

பாமாயில்

கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.20 விலை உயர்ந்து ரூ.3,050 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.165 விலை உயர்ந்து ரூ.6,435 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.1,500 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.100 விலை உயர்ந்து ரூ.5 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,300 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,740 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்பனை ஆனது.

கோதுமை தவிடு

பொரிகடலை 50 கிலோ ரூ.4 ஆயிரம் ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,310 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,600 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும் விற்பனை ஆனது.

ரவை 30 கிலோ ரூ.1,460 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.960 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,750 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.9,500 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.


Related Tags :
Next Story