பூக்கள் விலை தொடர்ந்து உயர்வு


பூக்கள் விலை தொடர்ந்து உயர்வு
x

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வாங்கி செல்ல குமரி மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். பொதுவாக பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் கிலோ ரூ.1,700-க்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.800 உயர்ந்து கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது. இதுபோல் பிச்சி கிலோ ரூ.1,250ல் இருந்து ரூ.1,900 ஆகவும், முல்லை கிலோ ரூ.1,200 ல் இருந்து ரூ.1,800 ஆகவும் உயந்தது.

விலை நிலவரம்

தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.450, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.150, துளசி ரூ.50, தாமரை 100 எண்ணம் ரூ.1,500, கோழிப்பூ ரூ.80, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஸ் பாக்கெட் ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.260, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.300, மஞ்சள் கேந்தி ரூ.90, சிவப்புக்கேந்தி ரூ.90, சிவந்தி மஞ்சள் ரூ.170, சிவந்தி வெள்ளை ரூ.200, கொழுந்து ரூ.180, மருக்கொழுந்து ரூ.130 என விற்பனையானது.

கடந்த ஆண்டு விலை

விலை உயர்வு குறித்து நேற்று பூ வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

பொதுவாக தோவாளை மார்க்கெட்டில் சுமார் 50 டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (அதாவது நேற்று) 100 டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் விற்று தீர்ந்தன. பிச்சி, முல்லை பூக்களை பொறுத்த வரையில் வழக்கமாக 1 டன் பூக்கள் வரும். ஆனால் இன்று (நேற்று) பிச்சி, முல்லை ஆகியவை 500 கிேலா மட்டுமே வந்தன. இதனால் விலை உயர்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ெபாங்கல் பண்டிகையின் முன்தினம் தோவாளை மார்க்கெட்டில் பிச்சி கிலோ ரூ.2,000, முல்லை ரூ.1,900, மல்லிகை ரூ.1,700 என விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story