பூக்களின் விலை கிடுகிடு உயர்வு


பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
x

பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், குளத்துபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்குநகர், மூலிமங்கலம், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர், செட்டி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.120-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும், விற்பனையானது. நேற்று முன்தினம் ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.160- க்கும், ரோஜா ரூ.200-க்கும் முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் விற்பனையானது. அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story