சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை உயர்வு


சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை மார்க்கெட்டில் சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,650-க்கும், ஒரு தாமரை பூ ரூ.40-க்கும் விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை மார்க்கெட்டில் சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,650-க்கும், ஒரு தாமரை பூ ரூ.40-க்கும் விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ மூலம் பூக்கள் வருகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை வாங்கி செல்ல குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

விலை அதிகரிப்பு

மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.450 உயர்ந்து ரூ.1,650-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ.1000-ல் இருந்து ரூ.500 உயர்ந்து ரூ.1500-க்கும், தாமரை ஒரு பூ ரூ.25-ல் இருந்து ரூ.15 உயர்ந்து ரூ.40-க்கும் விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.300, மல்லிகை ரூ.800, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.400, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.40, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.40, கோழிப்பூ ரூ.30, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஸ் பாக்கெட் ரூ.25, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.80, சிவப்புக்கேந்தி ரூ.85, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.170, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.130 என விற்பனையானது.

சிவராத்திரியால்...

இதுகுறித்து பூவியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், "தற்போது பனி அதிகமாக பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மார்க்கெட்டுக்கு பிச்சிப்பூ 2 டன் வரும். ஆனால் இன்று(நேற்று) 500 கிலோ மட்டுமே வந்தது. தாமரை 10 முதல் 15 ஆயிரம் பூக்கள் வரும். ஆனால் உற்பத்தி குறைவால் 200 பூக்கள் வந்தன. நாளை (இன்று)சிவராத்திரி என்பதால் பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது" என்றார்.


Next Story