மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை குறைந்து வருகிறது- கிலோ ரூ.60-க்கு விற்பனை


மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை குறைந்து வருகிறது- கிலோ ரூ.60-க்கு விற்பனை
x

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.

மதுரை


மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.

மாட்டுத்தாவணி மார்க்கெட்

தென் மாவட்டங்களில் மிக முக்கிய மார்க்கெட்டாக, மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.

இங்கிருந்து தென் மாவட்டங்கள், அக்கம்பக்கத்து மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் ெகாண்டு செல்லப்படுகின்றன.

இதுபோல் மதுரையில் உள்ள சில்லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுக்கு வந்து தான் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

சில வாரங்களாக தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.. தற்போது அந்த காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. ஆனால், தக்காளியின் விலை மட்டும் குறைந்தபாடில்லை. நேற்றும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது.

படிப்படியாக குறைகிறது

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "ஒரு கிலோ மிளகாய் ரூ.150 வரை விற்பனையானது. தற்போது அதன்விலை வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உருட்டு மிளகாய் ரூ.50 முதல் ரூ.70 வரையிலும், சம்பா மிளகாய் ரூ.50 முதல் ரூ.70 வரையிலும் விற்பனையாகிறது. இஞ்சியை பொறுத்தமட்டில் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலையும் குறைந்துள்ளது. அதாவது, புதிய இஞ்சி ரூ.100 முதல் ரூ. 130 வரையிலும், பழைய இஞ்சி ரூ.260-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகமாக இருந்தது. அதாவது, மழையின் காரணமாக வரத்து குறைந்து, மொத்த விலையில் சின்ன வெங்காயம் ரூ.150 வரையிலும், சில்லறை விலையில் ரூ.170 வரையிலும் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக, சின்ன வெங்காயம் மொத்த விலையில் ரூ.60 எனவும், சில்லறை விலையில் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் ரூ.25 வரை உள்ளது. வரும் நாட்களிலும் சின்ன வெங்காயத்தின் விலை இன்னும் குறையும்" என்றனர்.


Next Story