கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ரூ.10 குறைவு..!
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ. 10 விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story