உடன்குடி வாரச்சந்தையில்காய்கறிகள் கிடுகிடு விலை குறைவு:தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை


உடன்குடி வாரச்சந்தையில்காய்கறிகள் கிடுகிடு விலை குறைவு:தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி வாரச்சந்தையில்காய்கறிகள் கிடுகிடு விலை குறைத்துவிற்கப்பட்டன. இதில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி வாரச்சந்தையில் நேற்று காய்கறிகள் விலை கிடுகிடுவென குறைத்து விற்கப்பட்டன. தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டு அதிகஅளவில் வாங்கி சென்றனர்.

வாரச்சந்தை

உடன்குடி மெயின்பஜார் வாரச்சந்தை நேற்று கூடியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான கடைகளில் காய்கறிகள் அதிக அளவில் குவித்து வைத்து விற்கப்பட்டன. குறிப்பாக கடைகளில் தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மேலும், கடந்த வாரத்தை விட தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் குறைத்து விற்கப்பட்டன.

தக்காளி கிலோ ரூ.50

காய்கறிகள் விலை வருமாறு: ஒரு கிலோ பழைய இஞ்சி ரூ. 240-க்கும், புது இஞ்சி ரூ.110-க்கும், வெள்ளைப் பூண்டு ரூ.180-க்கும், தக்காளி, மிளகாய், உள்ளி என்ற சின்ன வெங்காயம், பீன்ஸ், கேரட், கருணைக்கிழங்கு ஆகியவை தலா ரூ.50-க்கும், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பல்லாரி, பீட்ரூட் ஆகியவை தலா ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

குறிப்பாக தக்காளி விலை பாதிக்கு பாதி விலை குறைந்து விற்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தொடர்ந்து பல வாரங்களாக பெரும்பாலான காய்கறிகள் உச்ச விலையில் விற்கப்பட்ட நிலையில், நேற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிகஅளவில் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் நேற்று கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்.


Next Story