தின்னரை குடித்த பூசாரி பலி
பழனி அருகே, தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த பூசாரி பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்
பழனி அருகே உள்ள அமரபூண்டி டி.கே.என்.புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). இவர், அப்பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலில் பூசாரியாக இருந்தார். கோவிலில் கிடாவெட்டும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக, நேற்று முன்தினம் அவர் கோவிலை சுத்தம் செய்ய சென்றார். அப்போது அங்கு பாட்டிலில் இருந்த தின்னரை, தண்ணீர் என நினைத்து அவர் குடித்து விட்டார்.
சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்த ஆறுமுகத்ைத அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story