சாலையில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த சிறை அதிகாரி
நெல்லையில் சாலையில் கிடந்த பணத்தை சிறை அதிகாரி எடுத்து போலீசில் ஒப்படைத்தார்.
திருநெல்வேலி
நெல்லை:
நெல்லை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் ரூ.10 ஆயிரம் ரூபாயுடன் மணிபர்ஸ் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் கிடந்தது. இதை அந்த வழியாக வந்த பாளையங்கோட்டை சிறை உதவி ஜெயிலர் பெருமாள் என்பவர் பார்த்து எடுத்து பெருமாள்புரம் போலீசில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம், அந்த அடையாள அட்டை முகவரியில் உள்ள நபரை தொடர்பு கொண்டு அழைத்து பணத்தையும் ஒப்படைத்தார்.
உதவி ஜெயிலர் பெருமாளை, பெருமாள்புரம் போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story