விநாயகர் சிலை ஊர்வலத்தால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


விநாயகர் சிலை ஊர்வலத்தால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x

விநாயகர் சிலை ஊர்வலத்தால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

விநாயகர் சிலை ஊர்வலத்தால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைக்க செல்வது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசியதாவது:-

இடையூறு ஏற்படக்கூடாது

"விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் அனைத்து அமைப்பினரும் செயல்பட வேண்டும். ஊர்வலம் முடிந்து வாகனத்தில் திரும்பும் போது பாட்டுகள் ஒலிக்க கூடாது".

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பையா, மதியழகன், ராஜேந்திரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன் குமார், தங்கராமன், உதயசூரியன், மகேஷ் குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story