நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 15½ பவுன் நகையை தவறவிட்ட பேராசிரியை


நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 15½ பவுன் நகையை தவறவிட்ட பேராசிரியை
x

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 15½ பவுன் நகையை தவறவிட்ட பேராசிரியையிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 15½ பவுன் நகையை தவறவிட்ட பேராசிரியையிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று மாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ், ஏட்டு விவேக் ராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் ஒரு பேக் கிடந்தது. அந்த பேக்கை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 15½ பவுன் நகை மற்றும் ஒரு லேப்-டாப் உள்ளிட்டவை இருந்தன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தோவாளை வடக்கூர் கலைவாணர் தெருவை சேர்ந்த பிந்து (வயது 47) என்பவர் ரெயில்வே போலீசை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தான் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருவதாகவும், விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியபோது தனது பேக்கை ரெயில் நிலையத்தில் தவற விட்டதாகவும் கூறினார். மேலும் பேக்கை மீட்டு தரும்படியும் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேக் பிந்துவுக்கு சொந்தமானதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பேக்கானது பிந்துவுக்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பிந்துவின் உறவினர்களை போலீசார் வரவழைத்து பேக்கை ஒப்படைத்தனர்.


Next Story