ஏழை எளிய இந்துக்களின் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன


ஏழை எளிய இந்துக்களின் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன
x

‘வக்பு வாரிய சொத்துகள் என்ற பெயரில் ஏழை எளிய இந்துக்களின் சொத்துகள் அபகரிக்கப்படும் மோசடி நடைபெறுகிறது’ என்று எச்.ராஜா கூறினார்.

ராணிப்பேட்டை

சாமி தரிசனம்

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த வேப்பூரில் உள்ள பால குஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேப்பூர் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வக்புவாரிய சொத்துகள் என்று நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சொத்துகள் அபகரிப்பு

வக்புவாரிய சொத்துகள் என்ற பெயரில் ஏழை எளிய இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கின்ற மோசடி செயல் நடந்து கொண்டிருக்கிறது. 2013-ம் ஆண்டு டெல்லியில் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மாற்றப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் 54 ஏக்கர் நிலங்கள் வாகாப் என்பவரின் நான்கு மனைவிகள் இந்துக்களிடம் வாங்கிய கடனை கட்டாததால் கோர்ட்டு மூலம் வாங்கிய சொத்துக்கள் ஆகும். வகாப் என்பதை வக்பு என்று மாற்றிவிட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து 24 மணி நேரத்தில் வேப்பூர் இந்துக்களிடம் இருந்து பறித்த சொத்துக்களை உடனடியாக உரிய நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் காலவரையற்ற போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் வக்பு சொத்துக்கள் என்ற பெயரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் தங்கள் தகவலை தெரிவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்களை அழைத்து வரும் தேர்தலுக்கு மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி பெரிய பிரச்சினையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story