விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் கீழ்வேளூரில் நடந்தது

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கீழ்வேளூர் பேரூராட்சியில் நகர்ப்புற மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத்தலைவர் லாசர் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் சித்தார்த்தன், துணைத்தலைவர் சந்திரசேகர், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வடக்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கக்கோரி, பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம் மனு அளித்தனர்.


Related Tags :
Next Story