கரும்பு கழிவுகளை கொட்ட வந்த 2 லாரிகளை பிடித்த பொதுமக்கள்


கரும்பு கழிவுகளை கொட்ட வந்த 2 லாரிகளை பிடித்த பொதுமக்கள்
x

கரும்பு கழிவுகளை கொட்ட வந்த 2 லாரிகளை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருச்சி

சமயபுரம்:

லால்குடி அருகே உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் இருந்து தினமும் லாரிகளில் கரும்பு கழிவுகளை ஏற்றி வந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், விளை நிலங்களும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கரும்பு கழிவுகளை கொட்டக்கூடாது என்று பலமுறை பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து அவ்வப்போது சிறுகனூர் போலீஸ் நிலையத்திலும் பொதுமக்கள் முறையிட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் தொடர்ந்து தினமும் கழிவுகளை கொட்டி வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை பி.கே.அகரம் என்ற இடத்தில் கரும்பு கழிவுகளை கொட்ட வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி, டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களே 2 லாரிகளையும் பிடித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story