தொலைநோக்கி மூலம் கோள்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்


தொலைநோக்கி மூலம் கோள்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்
x

நெல்லை அறிவியல் மைய ஆண்டு விழாவையொட்டி பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கோள்களை பார்த்து ரசித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தின் 36-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தொலைநோக்கி (டெலஸ்கோப்) மூலம் கோள்களை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, வியாழன், வெள்ளி, செவ்வாய், நிலா ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதையும், வியாழன் கோளின் 64 துணைக்கோள்களில் இயோ, யூரோப்பா, கனிமேடு, கலிஸடோ ஆகிய 4-ம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதையும் தொலைநோக்கி மூலம் பார்த்து ரசித்தனர். அப்போது கோள்கள் குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார், கல்வி அலுவலர் மாரிலெனின் ஆகியோர் விளக்கி கூறினர்.


Next Story