4 மாதங்களாக வாக்காளர் அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி


4 மாதங்களாக வாக்காளர் அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி
x

வேலூர் மாவட்டத்தில் 4 மாதங்களாக வாக்காளர் அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 4 மாதங்களாக வாக்காளர் அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை

18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். எனவே இவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டி விண்ணப்பிக்கின்றனர். வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களையும் பலர் மேற்கொள்கின்றனர். இதற்காக பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வாக்காளர் அடையாள அட்டை வாக்களிக்க மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெறுபவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்துடன் அச்சிடப்பட்டு அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் அட்டை பெற வேண்டி பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும், திருத்தம் மேற்கொண்டவர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

6 ஆயிரம் பேர் பாதிப்பு

இதுகுறித்து இ-சேவை மைய ஊழியர்களிடம் கேட்டபோது, அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் எங்களுக்கு அச்சிட தேவையான அட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால் அட்டை சுமார் 4 மாதங்களாக எங்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த அட்டை வந்தால் தான் நாங்கள் அச்சிட்டு கொடுக்க முடியும். அதுகுறித்து அதிகாரிகளிடம் நாங்களும் தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் எந்தவித தகவலும் முறையாக தெரிவிக்கவில்லை. அச்சிடுவதற்கு அட்டை வந்த பின்னரே, அதில் அச்சிட்டு பொதுமக்களுக்கு அடையாள அட்டை வழங்க முடியும்.

இதனால் பொதுமக்களுக்கு அட்டை வழங்க முடியாத நிலை உள்ளது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் அட்டை பெற முடியாமல் தவித்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story