டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி


டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி
x

மூதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த மூதூர் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கார்பந்தாங்கல், வளர்புரம், கோணலம், அம்மவார்தாங்கல், வீரநாராயணபுரம், வேலூர் பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் சிகிக்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் தலைமையில் சித்தா, கண், பொது என துறை சார்ந்த டாக்டர்கள், நர்ஸ் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சையின் தரம் குறைந்து போனது.

இங்கு 32 படுக்கை வசதிகளுடன், மகப்பேறு பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாக்டர்கள் இல்லாததால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். டாக்டர்கள் சென்னை போன்ற இடங்களில் இருந்து வருவதால் வாரத்திற்கு சில நாட்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். அவசர சிகிச்சைக்கு சென்றால் அரக்கோணம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல தெரிவிக்கின்றனர். இது சம்மந்தமாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்றும், ஆரம்ப சுகாதார நிலையத்தை முறையாக செயல்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story