வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தான் கிராம சபை கூட்டத்தின் நோக்கம்
வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தான் கிராம சபை கூட்டத்தின் நோக்கம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.
வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தான் கிராம சபை கூட்டத்தின் நோக்கம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.
கிராம சபை கூட்டம்
விருதுநகர் யூனியன் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, 100 நாள் வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-
அரசு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் மக்களிடம் இருந்து தான் பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதுதான் எங்களுடைய கடமை. அதன் அடிப்படையில் இந்த கிராம சபை கூட்டத்தின் வாயிலாக கிராமத்தில் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அதன் மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து தேவைப்படும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
சமுதாய வளர்்ச்சி
கிராமத்தில் கல்வியும், சுகாதாரமும் இருந்தால் தான் சமுதாயம் வளர்ச்சியும், மேன்மையும் அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலீட்டு நிதி வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவித்தார். கலெக்டர் தலைமையில் கிராம மக்கள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கூட்டத்தில் திட்ட இயக்குனர் திலகவதி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவேந்திரன், விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சாந்தி, பஞ்சாயத்து தலைவர் கார்மேகம், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.