அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்


அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்
x

அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வேலூர்

பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வி.எஸ்.ஜி.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஜெகன்நாதன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அந்த பள்ளிகளுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் சுகாதாரம், குடிநீர் வசதி, கழிப்பறைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஏற்றார் போல் அரசு பள்ளிகள் செயல்பட்டால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகளவு சேர்ப்பார்கள். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளின் குறித்த தகவல்களை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி, பெற்றோர்களுக்கு அரசு பள்ளியின் தரத்தை புரிய வைத்து சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story