விடுதி மேலாளரை தாக்கி பணம் பறித்த ரவுடி கைது


விடுதி மேலாளரை தாக்கி பணம் பறித்த ரவுடி கைது
x

வேலூர் அருகே விடுதி மேலாளரை தாக்கி பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூரை அடுத்த துத்திப்பட்டு காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலராமன் (வயது 33). இவர் அரியூரில் உள்ள ஒரு விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வாலிபர் ஒருவர் குடிபோதையில் விடுதிக்கு வந்து பாலராமனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த வாலிபர் விடுதி முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட பலராமனையும் அந்த வாலிபர் தாக்கி விட்டு சட்டைபையில் வைத்திருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு சென்றார்.

இதுகுறித்து பாலராமன் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டார். அதில், விடுதி மேலாளரை தாக்கி பணம் பறித்தது அரியூர் காந்திரோட்டை சேர்ந்த ரவுடி அப்பு என்கிற ரோகித்குமார் (34) என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ரோகித்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story